திருவாரூர் வட்டம் அடியக்கமங்கலம் அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம்

விஸ்வநாத சுவாமி ஆலய கும்பாபிஷேக விழாவில் இஸ்லாமியர்கள் மாலை,பூ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் அடியக்கமங்கலம் அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் புடை சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கிய கும்பாபிஷேக நிகழ்வானது 4 கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று மகா பூர்ணாஹதி செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

மேல தாளங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து பிரகாரப்பிரவேசம் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகா கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் முன்னதாக இஸ்லாமிய மத ஜமாத் சார்பாக விஸ்வநாத ஸ்வாமி ஆலயத்திற்கு பூ, மாலை, சந்தனம், கற்கண்டு, நெய், பழங்கள் உள்ளிட்டவை அடங்கிய சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்..

Exit mobile version