தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் தவெக -வுக்கு விசில் சின்னம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதையடுத்து திருவள்ளூரில் தவெகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீசாவதில் பிரச்சினை, கரூரில் நடைபெற்ற கூட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தால் சிபிஐ விசாரணை என தொடர்ந்து நெருக்கடியில் இருந்தார் நடிகரும் தவெக தலைவருமான விஜய். இந்நிலையில் 2026 தேர்தல் நெருங்கி விட்டதால் அதிமுக, திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தவெக கட்சிக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து இதனை வரவேற்கும் விதமாக நமது சின்னம் விசில், நல்லவர் சின்னம் விசில், ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில் என்றும் இது தவெக.வுக்கு முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கி இருப்பியதாகவும் விஜய் தெரிவித்தார். இதனையடுத்து திருவள்ளூரில் தவெக -வைச் சேர்ந்த கமாண்டோ பாஸ்கரன், எம்டி மணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் அருகில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், கட்சியின் சின்னமான விசிலையும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், ஆட்டோ, கார், பேருந்தில் செல்பவர்களுக்கும் பொது மக்களுக்கு வழங்கி கொண்டாடினர். தவெக.வுக்கு விசில் சின்னம் ஒதுக்கியிருப்பது முதல் வெற்றியாகவும், 2026 தேர்தலில் தவெக ஆட்சிக் கட்டிலில் அமரும் என்றும் தவெக வினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
















