அருள்மிகு வேதராஜன் திருக்கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம் திருநகரி என்னுமிடத்தில் அருள்மிகு வேதராஜன் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 35 வது திவ்ய தேசம். மேற்கு பார்த்து வீற்றிருந்த திருக்கோலம் திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார். இவருக்கு எதிரே ஒரு கொடிமரமும், பெருமாளுக்கு எதிரே ஒன்றும் என இரண்டு கொடி மரங்கள் உள்ளன.

பிரம்மாவின் புத்திரன் கர்த்தம பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான். இவனுக்கு தரிசனம் தர பெருமாள் தாமதம் செய்ததால், வருத்தமடைந்த லட்சுமி பெருமாளிடம் கோபம் கொண்டு, இத்தலத்தில் குளத்தில் இருந்த தாமரை மலருக்குள் தன்னை ஒளித்து கொண்டாள்.

பெருமாள் லட்சுமியை தேடி இத்தலம் வந்து லட்சுமியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அருகிலுள்ள திருவாலியிலும் இதேபோல் ஆலிங்கன
கோலத்தில் இருப்பதால், இரண்டும் சேர்த்து திருவாலி-திருநகரி ஆனது. திரேதாயுகத்தில் பிரஜாபதி உபரிசிரவஸ{ மன்னனாக பிறந்தான்.

இவன் இத்தலத்தின் மீது பு~;பக விமானத்தில் பறந்து வரும்போது இவ்விடத்தில் பறக்காமல் அப்படியே நின்றுவிட்டது. எனவே, இத்தலம் மிகவும் புண்ணியமானது எனக்கருதி தனக்கு மோட்சம் வேண்டி பெருமாளிடம் தவம் செய்தான். கிடைக்கவில்லை.

அடுத்த யுகத்தில் சங்கபாலன் என்ற பெயரில் ஒரு மன்னனின் மந்திரியாகப் பிறந்தான். அப்பிறவியிலும் தனக்கு மோட்சம் கேட்க, பெருமாள் கலியுகத்தில் கிடைக்கும் என கூறினார். கலியுகத்தில் நீலன் என்ற பெயரில் ஒரு படைத்தலைவனின் மகனாக பிறந்தான்.

இவன் திருவாலியில் வசித்த குமுதவல்லி நாச்சியாரை திருமணம் செய்ய நினைத்தான். அவள், ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்தால் நான் உங்களுக்கு மனைவியாவேன்,’ என்று நிபந்தனை விதித்தாள். இந்த அன்னதானத்திற்கு பொருள் தீர்ந்த பிறகு நீலன் வழிப்பறியில் ஈடுபட்டான்.

அந்த நேரத்தில் பெருமாள் லட்சுமியை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது நீலன் மறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் நீலனின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.இவ்வாறு திருவாலியின் வரலாற்றிற்கும் திருநகரியின் வரலாற்றிற்கும் ஒரே வரலாறு உள்ளது

மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 34 வது திருத்தலம். திருநகரி தலம் திருமங்கை ஆழ்வார் பிறந்த இடமாகும். இக்கோயிலின் இராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டது. கோயில். உற்சவரின் பெயர் கல்யாண ரங்கநாதர் ஆகும்.

இக்கோயில் வேதராஜன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. திருசுற்றில் வலப்புறம் ஆண்டாள் சன்னதியும், இடப்புறம் தாயார் சன்னதியும் உள்ளது. திருச்சுற்றில் பின்புறம் யோக நரசிம்மப் பெருமாள் உள்ளார். திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலம் . இவர் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் தனிசன்னதியில் அருள் தருகின்றார் ;

ஆழ்வார் பல அற்புதங்கள் செய்ததால் ஆழ்வார் கோயில் என்றும் அறியப்படுகிறது, இங்கிருந்து 1 கீ.மீ தூரத்தில் உள்ள வேதராஜபுரம்
என்ற இடத்தில்தான் திருமங்கைமன்னன் பெருமாளை வழிப்பறிசெய்தார்.

இவரை தடுத்தாட்கொண்ட பெருமாள் இவருக்கு திருமந்திரஉபதேசம் செய்தார். இதை உணர்த்தும் வண்ணம் இன்றும் இங்கு வேடு பறி உற்சவம் நடக்கிறது.. பெருமாள் கல்யாண திருக்கோலத்தில் இளம் தம்பதிகளாக காட்சி அளித்தார். இதனால் கல்யாண ரெங்க நாதர் என்று பெயர் வந்தது. ஆண்டு தோறும், தை மாதம் .பௌர்ணமி அன்று திருமங்கை ஆழ்வார் மங்கள சாசன உற்சவம் சிறப்பாக நடைகிறது.

அவ்வமயம் திருமங்கை ஆழ்வாரின் உற்சவ சிலையைப் பல்லக்கில் ஏற்றி திருமணிமாடம் முதல் திருநகரி வரை அழைத்துச் செல்லப்படுகிறார். கருட சேவை அன்று திருநகரி கோயிலின் சுற்றியுள்ள 11 திருநாங்கூர் கோயில்களிலிருந்து, கருட உற்சவர்களை, இக்கோயிலில் எழுந்தருளச் செய்வதுடன், திருமங்கை ஆழ்வாரையும், அவர்தம் இணையரான குமுதவள்ளியையும் அம்ச வாகனத்தில் எழுந்தருளச் செய்து, திருமங்கை ஆழ்வார் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களைப் பாடுவர்.

இக்கோயில் தென்கலை வைணவ வழிபாட்டைப் பின்பற்றுகிறது. இக்கோயிலை சோழர்கள் கட்டினார்கள் எனக் கருதப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர்கள் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்கள் இக்கோயில் திருப்பணி மேற்கொண்டனர். குலசேகர ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகியவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில் ஆகும். இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்த இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. கோயில் கோபுரம் ஏழு நிலைகளுடன் 125 அடி உயரம் கொண்டது.

Exit mobile version