கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் என்கிற ஊரில் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற இக்கோயில். இக்கோயில் கரிகால சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும்.
இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். இங்கிருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது. தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக இத்திருக்கோயிலின் தூண்கள் அமைந்துள்ளன.
இத்திருக்கோயிலின் புராதனப் பெயர் பிப்பலாரண்யம் (பிப்பலம் ஸ்ரீ அரச மரம்; ஆரண்யம் ஸ்ரீ காடு).மேலும், காமதேனுபுரி, பட்டிபுரி,ஆதிபுரி, தட்சிண கயிலாயம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம், பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் போன்ற மற்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.ஜ2ஸ
இக்கோயிலின் தல விருட்சமாக புளியமரம் மற்றும் பனைமரம் இருக்கின்றன. –
ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத் தொழிலினிடையே சோர்வுற்றுக் கண்ணயர்ந்து விட்டார். இதை அறிந்த திருமால் காமதேனுவை அழைத்து நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத்தொழிலை மேற்கொள்வாயாக என்று கட்டளையிட்டார்.
அதன்படி காமதேனுவும் இமயமலையில் அருந்தவமிருந்ததராம். ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை. அச்சமயம் நாரத முனிவர் திணகைலாயம் பற்றிச்சொல்ல, காமதேனுவும் கன்றுடன் அந்த இடத்தை அடைந்தது. அங்கே ஆதிலிங்க மூர்த்தியாகக் காஞ்சி நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலபிஷேகம் செய்து தவமிருந்தது.

ஒருமுறையின் காமதேனுவின் கன்றான “பட்டி” கால் குளம்பு புற்று சிவலிங்கம் மீது பட்டு சேதம் ஏற்பட்டது. இதை கண்ட காமதேனு தனது கன்றுக்குட்டியின் செயலுக்கு சிவபெருமானிடம் மன்னிப்பு கோரியது.
அப்போது காமதேனுவின் முன்பு தோன்றிய சிவபெருமான் பட்டி தனது கால்களால் தனது லிங்கமேனியை மிதித்ததை தாம் மகிழ்வுடன் ஏற்பதாகவும், இந்த தலம் முக்தி தரும் தலமாகியதால் காமதேனுவின் படைப்பாற்றல் வரத்தை தாம் திருக்கருகாவூரில் காமதேனுவுக்கு தருவதாகவும்.
காமதேனுவின் நினைவாக இந்த ஊர் காமதேனுபுரம் என்றும், அதன் கன்றான பட்டி பெயரால் பட்டீஸ்வரம் என்றும், எனக்கு பட்டீஸ்வரர் என்கிற பெயரும் உண்டாகும் என சிவபெருமான் வரம் தந்தருளினார்.
அருள்மிகு பட்டீஸ்வரர் கோயில் சிறப்புகள் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட கோயிலாக பட்டீஸ்வரர் திருக்கோயில் இருக்கிறது. சிவாலயங்களில் நடராஜர் ஆடும் நிலையில் இருக்கும் வடிவங்களையே நாம் வழிபடுவோம் ஆனால் ஆடி முடிக்கும் நிலையில் இருக்கும் நடராஜ பெருமானை இக்கோயிலில் நாம்
தரிசிக்கலாம்.
இங்குள்ள கனகசபையில் தான் பிரம்மா, வி~;ணு, காளி, சுந்தரர் ஆகியோர்களுக்கு ஆனந்த தாண்டவ நடராஜ தரிசனத்தை சிவபெருமான் வழங்கினார்.
சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இந்த கோயிலில் திருவாதிரை விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுவதால் இந்த கோயிலை “மேலைச்சிதம்பரம்”. இங்குள்ள மூலவர் சிவலிங்கத்தின் மீது காமதேனு பசுவின் கால் குளம்புகள் படிந்துள்ளதை இன்றும் நாம் காண முடியும்.

அம்பாள் பச்சைநாயகி அம்மனுக்கும்,மனோன்மணி அம்மனுக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன. பச்சை நாயகி அம்மனின் சந்நிதி சதுர வடிவில் இருக்கிறது. இக்கோயிலை தரிசிப்பவர்களுக்கு முக்தி தரும் தலமாக இருப்பதால், இங்கு நாய் வாகனம் இல்லாமல் பைரவர் அருள்புரிகிறார்.
அம்மன் சந்நிதிக்கு வெளியே வரதராஜ பெருமாளும், பிரகாரத்தில் மரத்தில் உருவான ஆஞ்சநேயரும் அருள் புரிகின்றனர். ஆதிசங்கரர் இங்குள்ள சிவபெருமானை மறைந்த தனது தாய்க்கு முக்தி தர வேண்டி வழிபட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
இக்கோயிலிலுள்ள பனைமரம் இறவா பனைமரம் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் முன்பு பிறவாப்புளி என்கிற புளியமரம் இருக்கிறது. இப்புளியமரத்தின் விதைகளை வேறு எங்கு விதைத்தாலும் அவை முளைப்பதில்லை என்பது ஒரு அதிசயமாக பக்தர்கள் கருதுகிறார்கள்.
இங்கே இறப்பவர்கள் காதில் சிவபெருமானே நமசிவாய மந்திரத்தை ஓதி முக்தி பேற்றை அருளுவதால் இப்பகுதியில் இறக்கும் தருவாயில் இருக்கும் மனிதர்களின் வலது புற காது மேலே இருக்கும் படி வைக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் விழா சிறப்பாக நடைபெறும். அப்பொழுது கோயில் தேர் அலங்காரப்படுத்தப்பட்டு வீதியில் உலா வரும். கோயில் தேரில் பட்டீசுவரர் – பச்சைநாயகி அம்மன் இருப்பர். மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர் நான்கு வம்ச பட்டகாரர்கள் தேரை வடம் பிடித்து தொடங்கி வைப்பார்கள்
சிவலிங்கத்தின் தலையில் காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். கோயிலின் முன்பு பிறவாப்புளி என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகள் எங்கு போட்டாலும் முளைக்காது. இப்பகுதியில் பசுக்கள் இடும் சாணத்தில் கூட புழுக்கள் இருப்பதில்லை என்பது ஆன்மீக அதிசயமாக இருக்கிறது.
இப்பகுதிக்கு அருகே இருக்கும் நொய்யல் ஆற்றங்கரையில் இருக்கும் பட்டிவிநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்றும், இந்த நதியில் இறந்தவர்களின் எலும்பை போட்டால் அது வெண்கற்களாக மாறிவிடும் எனவும் கூறப்படுகிறது.
முக்தி வேண்டியும், புகழ் கிடைக்கவும் நினைத்த காரியம் நடைபெறவும் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் சிவனுக்கு அபிஷேகம் செய்தும், வில்வ இலையால் அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்கின்றனர்.

















