நாகப்பட்டினம் மாவட்டம் சட்டையப்பர் வடக்கு வீதியின் வட சிறகில் அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
பாதாள உலகை ஆண்டு வந்த ஆதிஷேனுக்கு மகப்பேறு இல்லாததால் மிகவும் மனச்சோர்வடைந்து வசிஷ்;ட முனிவரை அணுகினான். சிவபூஜை செய்துவந்தால் மகப்பேறு சித்திக்கும் என்று முனிவர் அருளவே;
சிவராத்திரி தினத்தன்று இரவு நான்கு காலங்களும் முறையே, குடந்தைக் கீழ்க்கோட்டம் திருநாகேசுவரம்,திருப்பாம்புரம், திருநாகைக் காரோணம் ஆகிய நான்கு தலங்களை வழிபட்டான்.

நாகையை அடைந்து, தேவ தீர்த்தத்தில் நீராடி, காயாரோகணப் பெருமானையும், அம்பிகையையும் முறைப்படி வழிபட்டான். சர்வ தீர்த்தத்தின் மேல்திசையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான். அதன் பயனாக அவனது மனைவி ஒரு பெண் மகவை ஈன்றெடுத்தாள்.
ஆனால் அக்குழந்தைக்கோ மூன்று தனங்கள் இருக்கக் கண்டு வருந்தலாயினான். அப்போது நாகராஜனே வருந்தாதே இவளுக்குத் தக்க மணாளன் வரும்போது மூன்றாவது தனம் மறையும் என்று ஒரு குரல் ஒலித்தது.
ஆதிஷேனின் மகளான நாககன்னிகை, நாள்தோறும் ஆதிபுராணரை மனமுருகி வழிபட்டுவந்தாள். ஒருநாள் தேவ தீர்த்தக்கரையில் சோழ அரசகுமாரனாகிய சாலீசுகனைக் கண்டாள். அப்போது அவளது மூன்றாவது தனம் மறையவே, இவனே தனது மணாளன் என அறிந்து, தன் பெற்றோரிடம் கூறினாள்.
பிலத்துவாரம் வழியே நாகலோகம் சென்ற சோழனை ஆதிஷேன் வரவேற்றுத் தன் மகளை அவனுக்கு மணம் செய்துவித்தான். பின்னர் அவனை அரசாட்சி செய்யுமாறு கூறிவிட்டு, நாகராஜன் நாகையை வந்து அடைந்தான்.

நாக தீர்த்தத்தில் நீராடித் தான் பிரதி~;டை செய்த நாகலிங்கத்தை வழிபாட்டு வந்தான். இத்தீர்த்தத்தில் நீராடுவோரைப் பாம்பு தீண்டினாலும் விஷம் ஏறாமல் இருக்கக் கடவது என்ற வரமும் பெற்றான்.
ஆதிஷேன் மாசி மாத மகாசிவரத்திரியன்று பூஜை செய்யும்போது, இறைவன் காட்சி நல்கினான். அப்போது ஆதிஷேன், இறைவா, இந்நகரம் அடியேனது பெயரில் அழைக்கப்பட வேண்டும். இந்த லிங்கமூர்த்தியில் தாங்கள் எப்போதும் இருத்தல் வேண்டும் என்றும், இங்கு வந்து வணங்கும் அன்பர்களுக்கு வேண்டிய வரம் அனைத்தையும் தந்தருள வேண்டும் என்று வீழ்ந்து வணங்கினான்.
நாகநாதப் பெருமானும் அவன் வேண்டிய வரத்தைத் தந்தருளினார். நாகராஜன் வணங்கிய தலம். எனவே இறைவன் நாகநாதர் எனப்படுகிறார். நாகநாதருக்கு பால் அபிஷேகம் செய்வார்கள். பால் அவரது உடலில் பட்டவுடன் நீல நிறமாக மாறும் அதிசயத்தைக் காணலாம்.

இத்திருத்தலத்தின் பெருமை கிருதயுகத்திலே நான்முகனாகிய பிரம்மன் புண்ணிய நதிகளைக் கோவில் திருக்குளத்தில் சேர்த்து நீராடி பிறை சூடிய பெருமானைத் தரிசித்து துதித்த தலம்.
சர்ப்பத்தினால் தான் இழந்த ஒளியை மீண்டும் பெறுவதற்கு சூரியபகவான் இங்கு வழிபட்டார். இந்திரன் சாபவிமோசனம் பெற்ற அருள்தலம். வருணனின் மகன் தவமியற்றி கலி நீங்கிய பெரும்தலம். நாகராஜன் பணிந்தேத்தும் திருத்தலம். பஞ்சமாபாதகம் செய்த ஒருவன் இறைவனின் பூஜைக்குச் சாம்பிராணி தந்ததால் அவனது எமவாதை குறைந்தது.
இங்குள்ள நாகநாதரை வழிபட்டால் எண்ணியவை எண்ணியபடி நடக்கும். ராகு தோ~ம் நீங்க திருநாகேஸ்வரத்திற்கும், கேது தோஷம் நீங்க காளஹஸ்திக்கும் செல்வதற்குப் பதிலாக பேரையூர் நாகநாதரைத் தரிசித்தால் 2 கிரகங்களின் தோ~ங்களும் நீங்கும். திருமணம் தடைபட்டுவந்தால் அது நீங்கி திருமணம் நடக்கும். குழந்தைப்பேறு உண்டாகும். மாங்கல்ய தோஷம் அகலும். செய்த தவறுகளுக்கு பரிகாரம் கிடைக்கும் திருத்தலம்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள சுனையில் நீர்மட்டம் குறையும்பொழுது பக்கச்சுவரில் திரிசூலக்குறியொன்று காணப்படுகிறது. சூலத்திற்கு சரிமட்டத்தில் நீர் அமைந்திருக்கும் வேளையில் பங்குனி மாதம் மீன லக்னத்தில் சப்தம் எழுகிறது. மற்ற நேரங்களில் நீர்மட்டம் சூலத்திற்கு சரிமட்டமாக இருந்தாலும் அந்த முழக்கம் கேட்பதில்லை.
நாகநாதருக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக மாறுகிறது. கருவறையின் வெளிப்புறப் பின்சுவரில் அண்ணாமலையாரும், வடபுறம் பிரம்மாவும், மேற்குபுறத்தில் கஜலட்சுமியும், சுப்ரமணியரும் காட்சி தருகிறார்கள். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், துர்க்கை சன்னதிகள் உள்ளன.
பெரிய மண்டபத்தைக் கடந்து சென்றால் துவாரபாலகர்கள் காணப்படுகிறார்கள். உள்ளே கொடிரம், பலிபீடம், நந்திவிக்ரகம் ஆகியவை காணப்படுகின்றன. அங்கே சென்றால் முதலில் காணப்படுவது “ஓம்| என்னும் வடிவில் அமைந்துள்ள பு~;கரணி. இது ஒரு சுனைநீர் ஆகும். இதிலிருந்து சுவாமிக்கு அபிN~கத்திற்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது.
இச்சுனையில் நீர்மட்டம் குறையும்பொழுது பக்கச்சுவரில் திரிசூலக் குறியொன்று காணப்படுகிறது. சூலத்திற்கு சரிமட்டத்தில் நீர் அமைந்திருக்கும் வேளையில் பங்குனி மாதம் மீன லக்னத்தில் சப்தம் எழுகிறது. மற்ற நேரங்களில் நீர்மட்டம் சூலத்திற்கு சரிமட்டமாக இருந்தாலும் அந்த முழக்கம் கேட்பதில்லை.
மூலஸ்தானத்தில் இறைவன் சுயம்புவாக அமைந்திருக்கிறார். மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளுடன் கூடியது.

மூலஸ்தானத்தைவிட்டு வெளியே வந்தால் நடராஜரும் சிவகாமியும் தென்முகமாக எழுந்தருளி இருக்கிறார்கள். அடுத்து சுனையை பார்த்தவாறு விநாயகர் விக்ரகங்கள். இக்கோவிலின் பிரகாரத்தில் பிரார்த்தனையாகச் செலுத்தப்பட்ட கல்லில் ஆன நாகர் சிற்பங்கள் உள்ளன. நாகர் சிற்பங்களை அடுத்து சமயக்குரவர்கள் நால்வரும் சேக்கிழார் பெருமானும் காட்சி தருகின்றனர்.
அவர்களுக்கு எதிரே சின்முத்திரை காட்டி தட்சிணாமூர்த்தி தென்முகமாக அமர்ந்துள்ளார். மேற்கு பிரகாரத்தில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சியும் காட்சிதருகின்றனர். பிரகாரத்தை வலம் வந்து வலப்புறம் திரும்பினால் அம்பிகையின் சன்னிதானம் அபயவரதஹஸ்தங்கள் இவைகளுடன் கருணை தாங்கும் பார்வையும் அன்பு தவழும் முகமாக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் அன்னை பிரகதாம்பாள்.
நவக்கிரக மண்டலத்தில் இறைவன், இறைவி இருவருக்கும் தனித்தனியே கொடிமரம் உள்ளது. இரண்டு இடங்களிலும் நந்தி உள்ளது.
பங்குனி மாதம் மீன லக்னத்தில் இங்கு அமைந்துள்ள சுனையிலிருந்து பேர நாதம் எழுவதால் பேரேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது. இதுவே பேரையூர் என்று மருவியுள்ளது.
ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு கொடியேற்றி விழா நடக்கும். பங்குனி, சித்திரையில் நாகநாதருக்கு கொடியேற்றுவிழா நடைபெறுகிறது.
கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு இது பரிகாரத் தலம் எனப்படுகிறது. சீதையைத் தேடிவந்த இராமபிரான் இக்கோயிலில் தென்புறம ஓர் லிங்கமூர்த்தியை நிறுவி பூஜித்தார்; அம்மூர்த்தி இராமலிங்கேசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.

கிரகண காலங்களிலும், அர்தோதய-மகோதய புண்ணிய காலங்களிலும் இங்குள்ள கடலில் மூழ்கி இராமனாதப் பெருமானை வணங்குவோர், எல்லா நன்மைகளையும் அடைவர். இத்தலத்தை வழிபடுவோர், மணப்பேறு, புத்திரப்பேறு, நோய் நீக்கம் ஆகியன அருளப்பெறுகிறார்கள்.
ஸ்தல சரக்கொன்றை தற்போது இல்லை. மாறாக, ஒரே இடத்தில் ஆலும், வேம்பும் இணைந்த தோற்றத்தையே காண்கிறோம். தென்மேற்கில் வினாயகப்பெருமானின் சன்னதியும், வடக்குத் திருச்சுற்றில் முருகப்பெருமானது சன்னதியும் உள்ளன. மயில் வாகனனாக, வள்ளி-தெய்வானையுடன் அற்புதக் காட்சி வழங்குகின்றான் ஆறுமுகன். சண்டேசர், பைரவர் ஆகிய மூர்த்திகளையும் பிராகாரத்தில் தரிசிக்கலாம்