நவகைலாயத்தின் கோயில்களில் ஒன்று திருநெல்வேலி மாவட்டம் குன்னத்தூரில் அருள்;மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் ராகு தலமாக விளங்குகிறது.
இந்த சிவாலயத்தின் மூலவர் கோத பரமேஸ்வரர் அம்மன் சிவகாமி இருவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. சிவலிங்கத்திலேயே நாகர் இருப்பது இந்த திருத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
சுவாமி கைலாசநாதர் என்ற கோதபரமேஸ்வரரும், சிவகாமி அம்மனும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். முன் மண்டபம், அர்த்த மண்டபம், நடு மண்டபம் என்ற மூன்று மண்டபங்கள் உள்ளன.

ஒரு காலத்தில் குன்னத்தூரில் வாழ்ந்து வந்த அரசன் தங்கியிருக்கும் இடம் அருகே ஒரு அதிசய மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு ஆண்டில் ஒரு பூ பூத்து ஒரு பழம் மட்டுமே பழுக்கும். அந்த அதிசய கனியை அரசன் மட்டுமே உண்ணுவான். ஒரு முறை அந்த மரத்தின் பக்கமாக தண்ணீர் எடுத்து சென்ற ஒரு பெண்ணின் குடத்தில் மரத்தில் பழுத்திருந்த பழம் விழுந்து விட்டது.
இதை அறியாத பெண் வீட்டிற்கு சென்று விட்டாள். மரத்தில் பழத்தை காணாத அரசன் காவலர்களை அனுப்பி வீடு வீடாக பழத்தை தேடச்சொன்னான். இதற்குள் குடத்திலிருந்த தண்ணீரை எடுக்கும் போது அதற்குள் பழம் இருப்பதைக்கண்டு, அந்தப்பழத்தை அரசனிடம் கொண்டு போய் கொடுத்தாள்.
இந்த பெண்ணே பழத்தை திருடிக்கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து நல்லபெயர் எடுக்கிறாள் என நினைத்த அரசன் அவளை கழுவேற்ற உத்தரவிட்டான்.

அந்த பெண் இறக்கும் தருவாயில் நீதியற்ற இவ்வூரில் பெண்களும், குழந்தைகளும், பசுக்களும் தவிர மற்றவை அழியட்டும் என சாபமிட்டாள். எனவே இத்தலத்திற்கு வந்து வழிபடும் பெண்களுக்கு குழந்தைபாக்கியம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
கால சர்ப்ப தோ~ம், நாகதோ~ம் நீங்குவதோடு, வேலை வாய்ப்பில் உயர்வு, புதிய வேலை வாய்ப்பு வேண்டுபவர்கள் இங்கு வழிபட்டு சென்றால் பலன் கிட்டும் என்பது நம்பிக்கை. குழந்தையில்லா பெண்கள் இறைவனை வணங்கி மூன்று முறை கோயிலை வலம் வந்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் இங்கு வந்து பால் அபிN~கம் செய்கிறார்கள். சுவாமி, அம்பாளுக்கு அபிN~கம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

