மயக்கம் வருதாம்மா ? பூஸ்ட், ஹார்லிக்ஸ் ரெடியா இருக்கு ! தவெக நிர்வாகி

தருமபுரி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து மாநிலம் முழுவதும் நடைபெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் தாபா சிவா மக்கள் நலனை முன்னிறுத்திய எச்சரிக்கையால் கவனம் ஈர்த்தார்.

தருமபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரள் கூடியிருந்த நிலையில், பெண்கள் நிறைந்த பகுதியை நோக்கி தாபா சிவா,
“யாருக்காவது தலைச்சுற்றல், மயக்கம் மாதிரி இருந்தா உடனே வெளியே வந்துட்டு போங்க… நாங்க பூஸ்ட், ஹார்லிக்ஸ் ரெடியா வைத்திருக்கு!”
என்று மைக்கில் அறிவித்தார். கரூர் கூட்ட நெரிசலில் பலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தை நினைவில் கொண்டு அவர் இவ்வாறு முன்னெச்சரிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

SIRக்கு எதிரான தவெகின் மாவட்ட ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சுமார் 6 கோடி வாக்காளர்கள் இருப்பதால், வெறும் ஒரே மாதத்திற்குள் வீடு வீடாகச் சென்று விவரங்களைத் திரட்டுவது சாத்தியம் இல்லையென திமுக, கூட்டணி கட்சிகள், தவெக உள்ளிட்டவை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து நேற்று மாநிலம் முழுவதும் தவெக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், அருண் ராஜ், ராஜ்மோகன் உள்ளிட்டோர் பல இடங்களில் பங்கேற்றனர்.

தருமபுரி ஆர்ப்பாட்டத்திலும் மக்கள் திரள் அதிகரித்து இருந்த நிலையில், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க தாபா சிவா முன்கூட்டியே அறிவுரை வழங்கியமை, கூட்டத்தில் இருந்தோரை ஆச்சரியப்பட வைத்தது.

“எஸ்ஐஆர் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் முயற்சி”—தாபா சிவா குற்றச்சாட்டு

ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தாபா சிவா கூறியதாவது:

“எஸ்ஐஆரில் உள்ள குறைகளைக் களைவதற்காக தருமபுரி மக்கள் பெருமளவில் ஒன்றிணைந்துள்ளனர்.”

“மக்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், வாக்குரிமையை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையை திணிக்கிறது.”

“எஸ்ஐஆர் தமிழகத்தில் நடைமுறைக்கு வர விடமாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னார்; இப்போது நடந்துவரும் சூழ்நிலைக்கு அவர் பதில் தருவாரா?”

“மக்களின் மனதை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் மறைமுகமாக எஸ்ஐஆரை ஆதரிக்கும் சிலர், வெளியில் எதிர்ப்பது போல நடிப்பதாக” அவர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version