டீ, காபி தான் இளநரை முடிக்கு காரணமா ?

“நம்ம பாட்டி வீட்டுல இருந்து இப்போ வரைக்கும் ஒரு பேச்சு இருக்கு… டீ, காபி அதிகமா குடிச்சா முடி நரைக்குமாம்! இது உண்மையா? பொய்யா? இந்த வீடியோல இதைப் பத்தி ஆழமா பேசலாம்….

இன்றைய பரப்பரப்பான‌ உலகிலும் தலைமுடி என்றாலே இளசுகளுக்கு கொஞ்சம் அக்கறை அதிகம்தான். அக்கறை அதிகம் காட்டுவதாலோ என்னவோ முடிகொட்டுதல், இளநரை அப்படி இப்படின்னு ஆயிரம் பிரச்னை அந்த ஒற்றை தலைக்கு மேல் தாளம்போட்டுக்கொண்டே இருக்கிறது.

முடி உதிர்வதைத் கூட நம்ப இளசுங்க சகிச்சிட்டுப் போயிடுறாங்க. ஆனா, அந்த நூற்றுக்கணக்கான முடியில‌ ஒரு முடி வெள்ளையா இருந்துட்டா போதும். பேரிடி தலையில விழுந்த மாதிரி புஸ்சுனு போயிடுவாங்க.

சரி, டீ, காபி குடிச்சா இளநரை வரும்னு சொல்றது வெறும் வாய் வார்த்தையா அல்லது உண்மையா? இப்போ பார்க்கலாம்….

‘டீ, காபி எடுத்துக்கொள்வதற்கும் முடி நரைப்பதற்கும் நேரடித்தொடர்பு இல்லை. ஆனா, மறைமுக‌‌மானத் தொடர்பு இருக்கு. டீ. காபியில் காஃபைன் அதிகளவு இருக்கும். இதை நாம் அதிகளவு எடுக்கும்போது, அது தலைமுடியின்‌ ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால், இளநரை ஏற்படும்.

oxidative stress காரணமாகவும் இளநரை ஏற்படும். ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரெஸ் என்பது உடலில் கழிவுகள் அதிகளவில் உருவானதால், அவற்றை தடுக்க உடலின் antioxidant திறன் போதிய அளவில் இல்லாத நிலையைக் குறிக்கும்.

மனிதர்கள் சரியாக புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறைகளை கடைப்பிடித்தல் அவசியமா இருக்கு…

ஆனால், அதிகப்படியான டீ, காபி எடுத்துக்கொள்ளும்போது ஒருவேளை உணவைத் தவிர்ப்போம். அல்லது குறைந்த அளவு உணவு மட்டுமே எடுப்போம். இதனால், அவர்கள் உடலில் ஆக்சிஜன் அழுத்தம் உண்டாகி செல் பாதிப்பு ஏற்படும். இது, தலைமுடிக்கு நிறத்தை வழங்கக்கூடிய மெலனின் செல்களையும் பாதிக்கும். இதனாலும் இளநரை ஏற்படும்ன்னு சொல்லபடுது.

இதற்கான தீர்வு தான் என்ன்னு பார்த்தால், இளநரைப் பிரச்னைக்கு தீர்வு நம்ம கிட்ட தான் இருக்கு. டீ, காபி அதிகம் குடிப்பாவராக இருந்தால் அதை நாளொன்று ஒன்று அல்லது இரண்டு கப் என கொஞ்சம் கொஞ்சமாக குறைச்சிக்கோங்க. கூடவே தினமும் உடற்பயிற்சி செய்வது, வயதுக்கு ஏற்ற நிம்மதியான தூக்கம், ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவு உட்கொள்வது, போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது மிக அவசியம் .

Exit mobile version