முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 15,000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி ஆய்வு நடைபெற்றது.
இதேபோல் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் மாலை ஐந்து மணிக்கு லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற சோதனையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ. 15,000 ரொக்க பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர் .
இந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை காரணமாக முத்துப்பேட்டையில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
