திருத்துறைப்பூண்டி அரசுஊராட்சி  தொடாக்கபள்ளியில்ஆண்டு விழா, விளையாட்டுவிழா, பணிநிறைவு பாராட்டு விழா

திருத்துறைப்பூண்டி அருகேஅரசுஊராட்சி தொடாக்கபள்ளியில்ஆண்டு விழா, விளையாட்டுவிழா, பணிநிறைவு பாராட்டு விழா என முப்பெரும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது

காலை பள்ளியில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இரவு மாணவர்களின் ஆடல் பாடல் நாடகம் மற்றும் நாட்டுப்புறகலைகள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்

தொடர்ந்து விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
மேலும் காலை நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியரின் பணி நிறைவு விழா நடைபெற்றது பொது ஆசிரியர் பேசுகையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது அரசு பள்ளியில் தரமான கல்வி வழங்கப்படுகிறது இன்றைய தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை விட்டுவிட்டு அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டுமென பேசினார் இந்த முப்பெரும் விழாவில் ஏராளமான ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் மாணவர்களும் ஏராளமான கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

Exit mobile version