விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்டாலின் நகர்,இந்திரா நகர் மற்றும் சோழம்பூண்டியில் வசிக்கும் மக்கள் அவர்களின் பகுதிகளில் நியாய விலை கடை இல்லாத காரணத்தினால் நீண்ட தூரம் சென்று பொருட்கள் வாங்கி வரவேண்டிய சூழல் உள்ளதால் அவர்களின் பகுதியில் நியாவிலை கடை அமைத்து தரவேண்டுமென 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா ஸ்டாலின் நகர்,இந்திரா நகர் மற்றும் சோழம்பூண்டியில் மொத்தம் ரூபாய் 4 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பகுதிநேர நியாய விலை கட்டிடத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார், உடன் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெயச்சந்திரன் ஒன்றிய கழக செயலாளர் மும்மூர்த்தி முருகன் ஒன்றிய கவுன்சிலர் கிருத்திகா சதீஷ் ஊராட்சி மன்ற தலைவர் தயாளன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அப்பகுதி மக்கள் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவாவுக்கு பொன்னாடை அணிவித்து நன்றி கூறினார்

















