தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கிய முதல்வர் அவர்களின் தாய் சோபா சந்திரசேகர் அவர்கள்
சென்னை பாரிஸ் பகுதியில் மை வெல்பர் சோசியல் அசோசியேஷன் என்று தொண்டு நிறுவனத்தின் 17 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 1500 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பள்ளி புத்தக உபகரணங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற 21 மாணவர்களுக்கு உயர்ரக மடிக்கணினியும்வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் தாயார் சோபா சந்திரசேகர் அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி மற்றும் புத்தகங்கள் கல்வி உதவி தொகைகளை வழங்கினார்
நிகழ்ச்சி பேசிய ஷோபா சந்திரசேகர் அவர்கள் கல்வி நாட்டின் வளர்ச்சி என்றும் மாணவ மாணவிகள் சிறந்த முறையில் கல்விகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்
நிகழ்ச்சியில் பை வெல்பர் சோசியல் அசோசியேஷன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள் உட்பட சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியின் முடிவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது
