மயிலாடுதுறை அருகே நிலத்தை ரூபாய் 40 ஆயிரம் போக்கியத்திற்கு அடமானம் பிடித்தவர்களிடமிருந்து நிலத்தை மீட்ட நிலையில் அடமானம் பிடித்தவர்கள் நிலத்தை ஆக்ரமிக்கும் நோக்கில் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக பொய்புகார் அளித்து பெரம்பூர் காவல்நிலைய போலீசாரை வைத்து மிரட்டுவதாக குற்றசாட்டு:-
தங்கள் நிலத்தை ஆக்ரமிக்கும் நோக்கில் செயல்படுபவர்களுக்கு உடந்தையாக பெரம்பூர் காவல்துறையினர் செயல்படுவதாக குற்றம்சாட்டி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்திடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரங்கம்பாடி தாலுக்கா பட்டாவரம் கிராமத்தை சேர்ந்த அடைக்கலராஜ் என்பவர் தனது மனைவியுடன் வந்து அளித்த மனுவில் தனது தந்தை ஆரோக்கியநாதன் தத்தனூர் கிராமத்தில் போர்செட்டுடன் உள்ள 10 மா நிலத்தை பட்டாவரத்தை சேர்ந்த ராஜ் என்பவரிடம் ரூ.40 ஆயிரத்திற்கு அடகு வைத்துள்ளார். ஆரோக்கியநாதன் இறந்துவிட்டதால் அவரது மகன் ஆரோக்கியராஜ்(48) பணத்தை கொடுத்த நிலத்தை கேட்டபோது ராஜ் நிலத்தை திரும்ப ஒப்படைக்க ரூ,2 லட்சம் கேட்ட பணத்தை கடன்வாங்கி கொடுத்து நிலத்தை மீட்டு கடன் பெற்றவரிடம் போக்கியத்திற்கு நிலத்தை ஒப்படைத்தேன் ஆனால் நிலத்தில் சாகுபடி செய்ய விடாமல் தடுத்து ரூபாய் 10 லட்சம் பணம் தந்துவிடுகிறோம் ராஜ் வசம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று பஞ்சாயத்துப் பேசி ரூ,80 லட்சம் பெறுமான நிலத்தை ஆக்ரமிப்பதற்காக ஜாதி பெயரை சொல்லி தரக்குறைவாக பேசியதாக பெரம்பூர் காவல் நிலையத்தில் ராஜ் புகார் அளித்துள்ளார். பெரம்பூர் காவல்ஆய்வாளர் எதிர்தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு மிரட்டுவதாகவும் காவல் ஆய்வாளர் மலைச்சாமி மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும் காவல் ஆய்வாளர் மலைச்சாமி பேசும்’ ஆடியோவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து உரிய விசாரனை செய்து எனது நிலத்தை அபகரிக்கவேண்டும் என்று கெட்ட என்னத்தில் கட்டபஞ்சாயத்து செய்து எங்கள்மீது பொய்யாக PCR புகார் கொடுத்து மிரட்டி வருகிறார்கள். என்னையும் எனது குடும்பதையும் பாதுகாத்திடவும், எனது நிலத்தை பாதுகாத்து தந்திடவும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆடியோ குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீசார் கூறுகையில் ஆரோக்கியநாதனுக்கு சொந்தமான நிலம் 20 ஆண்டுகளாக தனது அனுபவத்தில் உள்ளதால் 10 லட்சம் ரூபாய் பணத்தை தருகிறேன் நிலத்தை தன்னிடம் கொடுத்துவிடும்படி ராஜ் கேட்டுள்ளார். இதனை அடைக்கலராஜ் ஏற்காத நிலையில் வயலில் பம்புசெட்’ மின்ஒயரை சேதப்படுத்தி வயலில் வேலை செய்த கூலி தொழிலாளியை ஜாதிபெயரை சொல்லி திட்டி மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் ராஜ் தரப்பினர் புகார் அளித்துள்ளனர். விசாரணைக்கு வராமலேயே தவறான குற்றசாட்டை அடைக்கலராஜ் தரப்பினர் கூறுவதாகவும், வயலில் மின்மோட்டர் உபகரணங்களை சேதப்படுத்தியதற்காக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
