திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதம் போராட்டத்தில் அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் பணியாளர்களுக்கு ஊதியத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்திட வேண்டும் பணி புதுப்பித்தல் முறையை ரத்து செய்திட வேண்டும் பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வாழ்ந்திட வேண்டும், CST, CRP கணக்காளர்களுக்கு மாதம் ரூ.10, ஆயிரம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

















