திருப்பத்தூரில் புரோ கபடி வீரர்கள் பங்கேற்கும் அகில இந்திய அளவில் நடைபெரும் சடுகுடு 75 கபடி போட்டி. 2வது நாளாக இன்று மக்கள் ஆரவாரத்துடன் கோலாகலமாக நடைபெற்ற கபடி போட்டி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் 75வது பவள விழாவினை முன்னிட்டு அகில இந்திய ‘ஏ’ கிரேடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்குபெறும் மாபெரும் சடுகுடு 75 கபாடிப் போட்டி நேற்று துவங்கியது.
தொடர்ந்து 28ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் இப்போட்டிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16 ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் என 32 அணிகள் பங்குபெறுகின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாக வெற்றி பெறும் இரு பிரிவு அணிகளுக்கும் முதல் பரிசாக ₹6,00,000 இரண்டாம் பரிசாக ₹ 3,00,000 மூன்றாம் பரிசாக இரண்டு அணிகளுக்குத் தலா ₹2,00,000 வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் விஸ்வநாதன், அர்ஜுனா விருது பெற்ற கபடி விளையாட்டு வீரர் மனத்தி கணேசன் , சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி உள்ளிட்ட பலர் பங்கு பெற்று துவங்கப்பட்ட இந்த சருகுடு 75 கபடி போட்டி இன்று இரண்டாவது நாளாக மக்கள் ஆரவாரத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

















