திருவாரூர் ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கௌதமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதான கோரிக்கையாக கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் 6000 ரூபாய் என்பதை சட்டமாக்க வேண்டும் , நல வாரியம் மூலமாக விண்ணப்பித்த அனைவருக்கும் 10 லட்சம் ரூபாய் வரை வீடு கட்ட நிதி உயர்த்தி வழங்க வேண்டும், மாவட்ட நலவாரிய அலுவலகங்களில் ஏஜெண்டுகளின் முறைகேடுகளை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் .

















