April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருப்பூரில் அதிமுகவின் பிரம்மாண்ட மக்கள் திருவிழா !

by sowmiarajan
March 3, 2026
in News
A A
0
திருப்பூரில் அதிமுகவின் பிரம்மாண்ட மக்கள் திருவிழா !
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருப்பூர் மாநகர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மறைந்த முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, மங்கலம் ரோடு கே.வி.ஆர் நகர் பகுதியில் எழுச்சிமிகு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது. விழாவிற்குத் திருப்பூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் சி.லோகநாதன் தலைமை தாங்கினார். வார்டு கவுன்சிலர் அன்பகம் திருப்பதி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்த விழாவானது ஜெயலலிதா அவர்களின் மக்கள் நலப்பணிகளை நினைவு கூரும் விதமாகவும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் களப்பணிகளை வலுப்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது.

இந்தச் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் மாநகர் மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ, திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் மற்றும் தலைமைக்கழகப் பேச்சாளர் கோபி காளிதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அவர்கள் பேசுகையில், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் ஆளுமையையும், அதிமுக ஆட்சிக் காலத்தில் திருப்பூருக்குச் செய்யப்பட்ட எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களையும் பட்டியலிட்டனர். தொடர்ந்து, இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 5000 தாய்மார்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிச் சிறப்பித்தனர்.

இந்த விழாவில் மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள் எஸ்பி.என்.பழனிசாமி, சிட்டி பழனிசாமி, பா.சு. மணிவண்ணன், வளர்மதி தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பகுதிச் செயலாளர்கள் எம்.கண்ணப்பன், ஹரிஹரசுதன், வார்டு கவுன்சிலர்கள் ஆர்.ஏ.சேகர், கனகராஜ் மற்றும் ஜவஹர்ராஜ், வார்டு நிர்வாகிகள் மறதியப்பன், வேலுசாமி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தலைமைக்கழகப் பேச்சாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற இந்தப் பொதுக்கூட்டம், திருப்பூரில் அதிமுகவின் அசைக்க முடியாத பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. விழாவின் நிறைவாக வார்டு பிரதிநிதி ஆட்டோ கோவிந்த் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags: AIADMKFestival TamilNadugrandpeoplespoliticaltiruppur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பிளஸ்-2 பொதுத்தேர்வு மையத்தில் பிரவீன்குமார் அதிரடி ஆய்வு – மாணவர்களுக்குவாழ்த்து!

Next Post

அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்!

Related Posts

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி
News

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

April 30, 2026
Next Post
அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்!

அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

சீர்காழி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 7 அடி முதலை மீட்பு,வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.