அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, கழகம் ஒன்றுபட வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் நேற்று நிருபர்களை சந்தித்த அவர், “அ.தி.மு.க.,வில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்க, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், என் போன்ற மனநிலையிலுள்ளவர்களுடன் சேர்ந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வேன்,” என்றார்.
இதுகுறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், செங்கோட்டையன்,
“எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக, ஜெயலலிதாவின் தலைமையில் வெற்றிகரமாக இயங்கியது. அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்து, இன்னும் நூறாண்டுகள் தமிழக மக்களுக்காக செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். அதை பிரதிபலிக்கும் வகையில் கழகம் ஒன்று பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்,” என்றார்.
மேலும், தன்னைச் சந்தித்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.