அதிமுக எம்.எல்.ஏ R.T. ராமச்சந்திரன் எடப்பாடி பழனிச்சாமிக்கு பகிரங்க எச்சரிக்கை..!

அதிமுக – வில் கட்சி மற்றும் தொண்டர்கள் நலன் கருதி, அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் அவர்களின் கோரிக்கையை ஏற்று பிரிந்து சென்ற அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்காவிடில், தமிழகம் முழுதுவதும் அதிமுக – வை எதிர்த்து போட்டி வேட்பாளர்களை களமிறக்க தான் சார்ந்த OPS அணி தலைமையிடம் நானே முன்மொழிவேன். அந்த நிலை ஏற்பட்டால் அதிமுக மீண்டும் படுதோல்வியை சந்திக்கும்.

குன்னம் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ R.T. ராமச்சந்திரன் எடப்பாடி பழனிச்சாமிக்கு பகிரங்க எச்சரிக்கை

அதிமுக அமைப்பு செயலாளரும் ஈரோடு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக-விலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பது குறித்து தனது கருத்தை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில் செங்கோட்டையன் கூறியுள்ளதை ஏற்று கட்சி தொண்டர்களை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிச்சாமி மறுத்து விட்டால் தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ் அணியின் சார்பில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் அனுமதியுடன் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று குன்னம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ R.T. இராமச்சந்திரன் (அதிமுக) தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ் அணியின் பெரம்பலூர் மாவட்ட கழக அம்மா பேரவை செயலாளராரும் , தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில பொறுப்பாருமான,அவர், கண்டிப்பாக தானே குன்னம், தொகுதியில் அதிமுக, திமுக -வுக்கு எதிராக வேட்பாளராக போட்டியிடுவேன், என்றும்,மேலும் பெரம்பலூரிலும் வேட்பாளரை நிறுத்துவேன், என்று தெரிவித்த அவர் தமிழகம் முழுவதும் இதே போல் அதிமுக-வுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்த நானே தனது தலைமைக்கு முன்மொழிவேன் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தமிழகம் முழுவது போட்டி வேட்பாளர் என்ற நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக ஈ.பி.எஸ் தலைமையிலான அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என்றும்
R.T. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எனவே கட்சி நலன் கருதி அண்ணன் செங்கோட்டையன் பின்னால் அவருடைய கருத்துக்கு ஒத்த கருத்துடன், இயங்கி வரும் தற்போதைய அதிமுக-வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மெளனம் களைத்து வெளியில் வர வேண்டும் என்று அவர்வேண்டுகேள் விடுத்துள்ளார்.

கவர்ச்சியான ஆளுமை மிகுந்த தலைவர்களான MGR, ஜெயல்லிதா இருவருமே கட்சியின் தேர்தல் வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டுபிரிந்தவர்களை நேரில் சென்று அழைத்து பேசி கட்சியை வளப்படுத்திய நிலையில், தற்போது அது போல ஆளுமை இல்லாத எடப்பாடி கட்சியைகைப்பற்றுவதில் மட்டுமே குறியாக இருப்பதன் நோக்கம் புரியவில்லை. அப்படி அவர் பிடிவாதமாக இருந்தால் கடந்த 4 தோதல்களில் அதிமுக படுதோல்வி அடைந்தது போல 2026 தேர்தலிலும் அதிமுக தோல்வியை சந்திக்கும். என்றார்.

பிரிந்தவர்கள் சேர்ந்தால் தனது தலைமை பறிபோகும் என்ற பயத்தில் தன்னம்பிக்கை இல்லாது அவர் இது போல் நடந்து கொள்கிறார் என்றும் விமர்சித்தார். 2019-ல் பாஜக வுடன் கூடவே இருந்து பா.ஜ.க தோற்க எடப்பாடி காரணமானார். ஆனால். தற்போது 2026 தேர்தலில் பா.ஜ.க ஒருங்கிணைந்த அதிமுகவை விரும்புகிறது. அதற்கு எடப்பாடியார் ஒத்துவர வில்லை என்றால் அண்ணாமலை வழியில் தினகரன் ஓ.பி.எஸ். உடன் பா.ஜ.க இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலைசந்தித்து
எடப்பாடியார் தனித்து விடப்படவும் வாய்ப்புள்ளது என்றார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் திமுக மீண்டும் அமோகமாக வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version