திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேவி மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளியில். அறிவியல் கண்காட்சி நடைபெற்று. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்புவரை மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் அறிவியல் செய்முறைகளை காட்சிப்படுத்தினர். இயற்கையோடு இணைந்த வாழ்வியலை மேம்படுத்தும் காரணிகளான தண்ணீர் சேமிப்பு மற்றும் சிக்கனம், தண்ணீர் மாசு, மண்ணரிப்பு தடுப்பு, சூரிய குடும்பம் மற்றும் கோள்களின் இயக்கம், தானியங்கி போக்குவரத்து சிக்னல், கணிதப் புதிர்கள், மழலையர்களுக்கான செயல்வழி கணிதம், பேரிடர் மேலாண்மை புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பார்வைக்கு வைத்திருந்தனர். தேவையற்ற குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரித்தல்,ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்புகள், நன்மைகள் ஒளி விளக்கு மூலம் கொசுக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தல் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் விவசாயம் குறித்த விழிப்புணர்வு, உணவே மருந்து , பிளாஸ்டிக் தவிர்த்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சந்திராயன் விண்கலம் செயல்படும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக ஏஐ தொழில் நுட்ப அபரித வளர்ச்சியை விளக்கும் விதமாக செல்போனில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு ரோபோ பதில் அளித்த விதம் அனைவரையும் கவர்ந்தது .அறிவியல் விழாவில் பிரமாண்டமான அறிவியல் கண்காட்சி அரங்குகள் மற்றும், அறிவியல் செய்முறை விளக்கங்கள், மற்றும் அறிவியல் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செல்ல நாட்டுப்புற கலைகளான பொம்மலாட்டம், தெரு கூத்து, வில்லுப்பாட்டு, கிராமிய பாடல்கள் ஆகிய இந்த அறிவியல் கண்காட்சிகள் போன் 500-க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றுள்ளது. கண்காட்சியை மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி , தொழில் முனைவோர் கௌரி சுகாதார அதிகாரி தமிழ்செல்வன் , பள்ளி தாளாளர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர் . அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் பார்வையிட்டனர்.

















