மத்திய அரசின் 125 நாள் வேலைத்திட்டத்தை திமுக அரசு சீர்குலைப்பதாக குற்றம் சாட்டி மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் ஒன்றிய அலுவலகங்கள் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் :-
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்பட்டு பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்து இருந்தது , மேலும் சம்பளம் 300 ரூபாயாக உயர்த்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனை ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசு செயல்படுத்தவில்லை எனவும் , மத்திய அரசு அறிவித்த 125 நாள் வேலை திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாக குற்றம் சாட்டி அதிமுகவினர் அனைத்து உன் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறையில் ஒன்றிய செயலாளர் சந்தோஷ் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதேபோன்று குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் 300க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

















