கரூர் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளரும் முன்னால் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..
- கரூர புதிய பேருந்து நிலையம், அறிவியல் பூங்கா, கரூர் காமராஜ் மார்க்கெட், வெங்கமேடு மீன் மார்க்கெட் திறப்பு விழா மற்றும் 18331 பயணாளிகளுக்கு நலத்திடங்கள் வழங்க அனுமதி வழங்கிய கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்களுக்கும், கரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இக்கூட்டத்தின் வாயிலாக கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
- கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இருந்து BLA-2, BDA, BLC மற்றும் பூத் இளைஞர் அணி, பூத் மகளிர் அணி நிர்வாகிகள் 16000 பேர் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
- தமிழ்நாடு அரசின் ஊரக பகுதிகளில் 15 அரசுத் துறைகள் மூலம் 46 சேவைகள், நகரப் பகுதிகளில் 13 அரசுத் துறை சார்பில் 43 சேவைகள் அனைத்து மக்களையும் நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் கழகத் தலைவர். தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் கொண்டு வந்துள்ள உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வரும் 15.07.2025 தமிழ்நாடு முழுவதும் தொடங்குகிறது. கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் 179 இடங்களில் மூன்று மாதம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் மனுக்களை அதற்குரிய அதிகாரிகளிடம் அழைத்து சென்று முகாம்களில் தேவையான ஏற்பாடுகளை செய்து பொதுமக்களுக்கு உதவியாகவும், திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் உதவிட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.