மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சிக்குட்பட்ட சம்புவராயன் கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் கூலித் தொழிலாளி இவரது மனைவி கொளஞ்சியாள் (45). இவர் காற்றுடன் மழை பெய்ததால், வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் மேய்ந்துக்கொண்டிருந்த தனது ஆடுகளை ஓட்ட சென்றார்.
அப்போது திடிரென இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மயங்கி விழுந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் கொளஞ்சியாள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து உடலை பிரதேச பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனை பினவரையில் வைத்தனர். இது தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவலறிந்த சீர்காழி கோட்டாட்சியர் சுரேஷ்,வட்டாட்சியர் அருள்ஜோதி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி அரசு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
