இந்தத் தேர்தல் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கும் டெல்லிக்கும் நடக்கக்கூடிய ஒரு யுத்தம் அரசியல் போராட்டம் அரசியல் போராட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக உறுதியாக வெற்றி பெறுவார்கள் என திருத்துறைப்பூண்டியில் சிபிஐ கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சிபிஐ கட்சி மூத்த தலைவர் முத்தரசன் பேட்டி…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து அறிமுக கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முத்தரசன் பங்கேற்றார் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது…
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை காரணம் வெறும் சீட்டுகளின் எண்ணிக்கையில் அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல மாறாக கொள்கை அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து செயல்பட்டு வரக்கூடிய மகத்தான அணி என்றும்
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் தமிழ்நாட்டில் இதில் ஐந்து அணிகள் உள்ளன சசிகலா ராமதாஸ் புதிதாக ஒரு அணியை உருவாக்கி பல இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள் அது மாதிரி இன்னொரு தலைவர் ஒரு நூறு தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்திருக்கிறார் நான்கு ,ஐந்து ,ஆறு என்று அணிகள் அதிகமாக கொண்டிருக்கிறது அது வேற விஷயம்
ஆனால் புதிதாக கட்சி தொடங்கி இருக்கிற ஒருவர் ஏதோ ஒரு நம்பிக்கைகள் திரைப்படத்தில் கிடைத்த அந்த ஆதரவின் மூலமாக அரசியலிலும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார் தவறல்ல அரசியல் வேறு திரைப்படத்துறை வேறு என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஆகச்சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் செவாலியர் பட்டம் பெற்றவர் அவர் தனியாக கட்சி தொடங்கி 89 ஆம் ஆண்டு அவர் போட்டியிட்டார்.
திருவையாறு தொகுதியில் முடிவு என்னவென்று தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் வெற்றி தோல்வி என்பது அது ஒரு பக்கம் இருக்கட்டும் ஒரு அரசியல் கட்சியினுடைய தலைவர் வரவு செலவு சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்க வேண்டும்
அதைக் கொடுக்கிற பொழுது அப்பாவுக்கு கடன் கொடுத்தேன் அம்மாவுக்கு கடன் கொடுத்தேன் மனைவிக்கு கடன் கொடுத்தேன் மகனுக்கு கடன் கொடுத்தேன் மகளுக்கு கடன் கொடுத்தேன் குடும்பத்தில் இருக்கின்ற அப்பா அம்மா மகன் மனைவி மகள் அத்தனை பேருக்கும் கடன் கொடுத்திருக்கிறேன் என்று தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார் இதுவரை இப்படி ஒரு விஷயத்தைப் பார்த்தது கிடையாது இப்படி ஒரு அரசியல் கூத்து நடக்கிறது
கூட்டம் கூடுவது என்பது பொதுவாக திரைப்படத்துறையில் இருக்கக்கூடிய நடிகர் நடிகைகள் வெளியே வந்தால் அவர்களைப் பார்ப்பதற்காக ஒரு கூட்டம் வர தான் செய்யும் அது இயல்பானது பார்க்க வர கூட்டம் வேறு பேச்சைக் கேட்க வர கூட்டம் வேறு முதலமைச்சருக்கு வருகிற கூட்டம் பேச்சைக் கேட்க வர கூட்டம் என்றும் எனவே பார்ப்பதும் கேட்பதும் ஒன்றாகி விடாது .
என்னதான் பல சித்து வேலைகள் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது வாக்குகளை பிரிப்பதன் மூலமாக மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியை தோற்கடித்து விடலாம் என்று பாரத ஜனதா கட்சியினுடைய வஞ்சகவளையில் அந்தக் கட்சியும் விழுந்து இருக்கிறது .இந்த புதிதாக தொடங்கி இருக்க கட்சி என்பது பாஜக விரித்த வஞ்சக வலை என்றும்
ஜனநாயகன் என்கின்ற படம் வராமல் போனதற்கு காரணம் யார் என்று எல்லாருக்கும் தெரியும் சென்சார் போர்டு ஒன்றிய அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டு இருக்கக்கூடிய அமைப்பு மாநில அரசுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது .
சென்சார் போர்டு தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சனையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புகிறது இவர்கள் நீதிமன்றம் செல்கிறார்கள் நீதிமன்றம் நீ திரும்ப கீழ் கோட்டுக்கு போ என்கின்றது கீழ் கோர்ட் சென்சார் போர்டுக்கு போகிறது சென்சார் போர்டு தேர்தல் ஆணையத்திற்கு போகிறது ஆக இந்த குழப்பம் படம் வெளிவராமல் தடுத்து இருப்பது இன்று வரை யார் என்பது எல்லோருக்கும் தெரியும் ஒன்றிய அரசாங்கம் தான்.
மாநில அரசாங்கத்தை விமர்சனம் செய்து பேசுகிறார் ரெண்டு பேரும் ஒன்றுதான் என்று பேசிவிட்டு ஆனால் முழுக்க முழுக்க விமர்சிப்பது திமுக அரசை பற்றி மட்டுமே தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டிருப்பது தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் அதன் மூலமாக யாருக்கு…
