புதுடில்லி : 2024ஆம் ஆண்டுக்கான உலகின் மிகப்பெரிய பயணிகள் திரளைக் கையாளும் விமான நிலையங்கள் பட்டியலில், இந்தியாவின் டெல்லி விமான நிலையம் 9வது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த பட்டியலை சர்வதேச விமான நிலைய கவுன்சில் (ACI) அமைப்பு வெளியிட்டுள்ளது. உலகளவில் விமான போக்குவரத்து அதிகமாக நடைபெறும் 20 விமான நிலையங்களை இது உள்ளடக்கியது.
பட்டியலில் முதலிடத்தை அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையம் பெற்றுள்ளது. இந்த நிலையம் 10.80 கோடி பயணிகளை 2024ஆம் ஆண்டு கையாண்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் துபாய் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இது 9.23 கோடி பயணிகளை கையாள்ந்துள்ளது.
மூன்றாவது இடத்தில் அமெரிக்காவின் டல்லாஸ் விமான நிலையம் (8.78 கோடி பயணிகள்) உள்ளது.
இந்தியாவின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (டெல்லி), கடந்த ஆண்டு 7.78 கோடி பயணிகளை கையாண்டு, 9வது இடத்தைப் பெற்றுள்ளது. 2023-ல் 10வது இடத்தில் இருந்த டெல்லி, இப்போது ஒரு படி உயர்ந்து 9வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
மற்ற முக்கிய விமான நிலையங்கள் இடம் பெற்ற நிலைகள் :
4வது இடம் : ஜப்பானின் ஹனிடா விமான நிலையம்
5வது இடம் : பிரிட்டனின் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம்
6வது இடம் : அமெரிக்காவின் டென்வர் விமான நிலையம்
7வது இடம் : துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம்
8வது இடம் : அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையம்
10வது இடம் : சீனாவின் ஷாங்காய் விமான நிலையம்
இந்த பட்டியலில் அமெரிக்கா மட்டுமே 6 விமான நிலையங்களுடன் பெரும் பங்காற்றியுள்ளது.
ACI அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் உலகளவில் 940 கோடி பயணிகள் விமானங்களில் பயணித்துள்ளனர். இதில், முதலிடம் பிடித்த 20 விமான நிலையங்கள் மட்டும் 15.4 கோடி பயணிகளை கையாள்ந்துள்ளன.