மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே காஞ்சிவாய் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் பணியில் சமையல் கிடங்கில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கேஸ் அடுப்பில் இருந்து லீகேஜ் ஏற்பட்டு தீப்பற்றி எறிய துவங்கியுள்ளது. இதனை சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள் அருகில் இருந்த சாக்கு பைகளை வைத்து தீயை துரிதமாக செயல்பட்டு அணைத்தனர் . பின்னர் குத்தாலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை ஊற்றினர். மேலும் அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் , பொதுமக்களுக்கு அதிகாரிகள் தகுந்த அறிவுரைகளை வழங்கினர். தொடர்ந்து மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பெரிய அளவில் ஏதும் சேதம் ஏற்படவில்லை.

 
			















