வத்தலகுண்டுவில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ‘வெற்றி நிச்சயம்’ திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ், கால்நடை வளர்ப்பு மற்றும் மேலாண்மை குறித்த 20 நாட்கள் தீவிர திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது.  ​வத்தலகுண்டு கால்நடை மருந்தக வளாகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமிற்கு, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். ​கொடைக்கானல் உதவி இயக்குனர் மருத்துவர் ஆறுமுகராஜ் ஒட்டன்சத்திரம் கால்நடை மருத்துவர் பிரபு  ​நிலக்கோட்டை கால்நடை மருத்துவர் சுரேஷ் குமார் ​கொடைக்கானல் கால்நடை மருத்துவர் ரமேஷ் ​திண்டுக்கல் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன உற்பத்தி உதவி மருத்துவர் தனலட்சுமி ​கால்நடை மருந்தக உதவி மருத்துவர்கள் குன்னூவராயன் கோட்டை பாஸ்கரன் மற்றும் வத்தலகுண்டு ரவி ​மேலும், கால்நடை ஆய்வாளர் அழகுராஜா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முருகன், அமிர்தம் மற்றும் அருள் பிரசாத் உள்ளிட்டோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ​இந்த முகாமில் வத்தலகுண்டு, நிலக்கோட்டை, கொடைக்கானல், பூசாரிபட்டி, கொடைரோடு, விளாம்பட்டி மற்றும் ராமராஜபுரம் ஆகிய சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 25 இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

​பயிற்சியில் ​லாபகரமான பால்பண்ணை கறவை மாடுகளைத் தேர்வு செய்தல் மற்றும் பால் உற்பத்தியைப் பெருக்கும் நவீன முறைகள். ​ செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் பன்றி வளர்ப்பில் உள்ள பொருளாதார நன்மைகள்.  நாட்டுக்கோழி மற்றும் பண்ணைக் கோழி வளர்ப்பில் நோய் மேலாண்மை. ​ கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து மிக்க பசுந்தீவனங்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட தீவனங்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்கள். ​​20 நாட்கள் நடைபெற்ற இந்த முழுமையான சான்றிதழ் படிப்பின் துவக்கத்தில், பயிற்றுநர்களுக்குத் தேவையான பயிற்சி கையேடுகள், குறிப்பேடுகள் மற்றும் எழுதுபொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டன. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுயவேலைவாய்ப்பை உருவாக்கவும் இந்த ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ​பயிற்சி முடிவில், கலந்து கொண்ட பயனாளர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் அவர்கள் வங்கி கடன் பெற்று சுயதொழில் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version