வெட்டி எடுக்க எடுக்க வந்த அழுக்கு சட்டைகளும் நெகிழி பைகளும் ஒருவர் உடலில் இவ்வளவு அழுக்கு சட்டையும் நெகிழி பைகளும் போட்டுக் கொண்டு இவ்வளவு நாள் சுற்றி திரிந்தவரா ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள்.
மனநலம் பாதிக்கப்பட்டவர் உடலில் சுற்றி வைத்திருந்த அழுக்கு சட்டைகளையும் நெகிழி பைகளையும் வெட்டி எடுத்து அவருக்கு முடி திருத்தம் செய்து தூய்மைப்படுத்தி புதிய ஆடைகள் வழங்கிய சமூக சேவகர் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக சேவகர் பாரதிமோகன் இவர் பாரதி மோகன் அறக்கட்டளை என தொடங்கி கடந்த பல ஆண்டுகளாக தனது ஏழ்மை நிலையிலும் பல்வேறு சேவைகளை செய்து வருகிறார் நாள்தோறும் சாலையில் வச்சிக்கும் ஆதரவற்றோர் முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரில் தேடி சென்று உணவு வழங்குதல் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரியும் நபர்களை கண்டறிந்து முடி திருத்தம் செய்து சுத்தம் செய்து புதிய ஆடை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறார் இந்நிலையில் கோயம்புத்தூர் பகுதியில் பைபாஸ் சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது உடல் முழுவதும் அழுக்கு சட்டைகள் நெகிழி பைகளை சுற்றிக்கொண்டு திரிந்து வருவதாகவும் அவரை தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் வந்த தகவலை எடுத்து அங்கு சென்ற சமூக சேவகர் பாரதி மோகன் சிலர் உதவியுடன் அந்த நபரை பிடித்து அவர் உடல் முழுவதும் ஏராளமாக போட்டுக் கொண்டு இருந்த அழுக்கு சட்டைகளையும் நெகிழி பைகளையும் வெட்டி எடுத்து முடி திருத்தம் செய்து குளிக்க வைத்து தூய்மைப்படுத்தி புதிய ஆடை வழங்கியுள்ளார் ஆனந்த் என்ற அந்த நபரை தூய்மைப்படுத்தி புதிய ஆடை போட வைத்து அழகு படுத்தி உள்ளார் இந்த காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் வியப்படைய செய்துள்ளது பலரும் பாராட்டு
