திருவள்ளூர் அருகே கள்ளக்காதலியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கள்ளக்காதலனுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக 3 ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அம்சவல்லி இவர் கணவரை பிரிந்து தனது மகள் சங்கீதா(வ/18), உடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அம்சவல்லிக்கு கட்டிட மேஸ்திரி நஜ்முதீன் என்கிற ராஜு மணி நாயர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிய நிலையில் ராஜுமணிநாயர் அடிக்கடி அம்சவல்லி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் கள்ளக் காதலியின் முதல் கணவருக்கு பிறந்த 18 வயது மகளான சங்கீதாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு அவர் சங்கீத அணிந்திருந்த நகைகளை எடுத்துக் கொண்டு மும்பைக்கு தப்பி சென்றுள்ளார். இது குறித்த தாய் அம்சவல்லி அளித்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பையில் தலைமறைவாக இருந்த ராஜு மணி நாயரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்பு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி 18 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும் நிருபிக்கப்பட்டதால் ராஜு மணி நாயருக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக இந்த வழக்கில் 3 ஆயுள் தண்டனையும், 35 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கினார். அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.














