ராணுவம் மற்றும் காவல் துறையில் ஆர்வமுடன் பணியாற்ற விரும்பும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு உடற்தகுதி பயிற்சி அளித்து ஊக்குவிக்கும் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு வீரர் பெத்தபெருமாள்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வசித்து வரும் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு வீரர் பெத்தபெருமாள், இவர் எல்லை பாதுகாப்பு படையில் 12 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தினமும் மயிலாடுதுறையில் உள்ள மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள சாய் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி செய்து வரும்போது அங்குள்ள ஏழை எளிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி செய்வதை கண்டார். ஒவ்வொருவரும் உடற்பயிற்சியை முன்னுக்கு பின்னாக மாறாக செய்து வந்ததைக் கண்டார். உடனே அந்த இளைஞர்களிடம் போய் கேட்டபோது நாங்கள் காவல்துறையில் பணியாற்ற விரும்புகிறோம் அங்கு என்ன உடற்தகுதி பயிற்சிகள் எடுக்கப்படும் என்று எங்களுக்கு தெரியவில்லை. ஏதோ எங்களுக்கு தெரிந்த உடற்பயிற்சியை கற்றுக்கொண்டு காவல் துறையிலும் ராணுவத்தினிலும் பணியாற்ற ஆர்வம உள்ளோம் என்று தெரிவித்தனர். தனியார் நிறுவன உடற்தகுதி பயிற்சி மையத்திற்கு சென்றால் மாதம் மாதம் 1000 ரூபாய் முதல் 5000 வரை கேட்கிறார்கள். எங்களால் அந்த பணத்தை கொடுக்க இயல முடியாது. ஆனால் எங்கள் மனதில் ஓடுவதெல்லாம் காவலர் மற்றும் ராணுவ வீரராக ஆக வேண்டும் என்ற எண்ணம் ஓடுகிறது. அதற்காக தான் இப்படி பயிற்சி எடுக்கிறோம் என்று கூறியதைக் கேட்ட பெத்தபெருமாள். கவலைப்படாதீர்கள் நான் உங்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறேன் என்று கூறி கடந்த ஐந்து வருடங்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ள இளைஞர்கள் அதற்கான எழுத்து தேர்வு மட்டும் உடல் தகுதி தேர்வுகளில் அதிக அளவில் வெற்றிபெற முடியாமல் அவர்களது லட்சியத்தை அடைய முடியாமல் தொய்வு ஏற்படுவதை அறிந்தும். காவல்துறை பணிக்கு செல்ல வேண்டுமென்ற துடிப்பும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இந்திய இளைஞர் வாழ்வியல் அறக்கட்டளை சார்பில் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார் ஓய்வு பெற்ற எல்லைபாதுகாப்பு வீரர்.
காவலர் மற்றும் ராணுவ தகுதி தேர்வில் தேர்வுக்கு எழுத்து தேர்வு இயல்பானது. ஆனால் உடற்தகுதி தேர்வு என்பது கடினமானது. தேர்வு மையத்தில் எடுக்கப்படும் உடற்தகுதி பொறுத்துதான் வேலை அமையும். தேர்வு மையத்திற்கு செல்லும்போது
தேர்வாளர்கள் உடற்தகுதி குறித்து எந்த பயிற்சியும் இல்லாமல் வேலை அறிவிப்பு வந்தவுடன் தேர்வு மையத்திற்கு சென்று பல இளைஞர் மற்றும் இளம் பெண்கள் தேர்வில் தேர்ச்சி பெறாமல் ரிசெட் ஆகி வந்து விடுகிறார்கள். இதை உணர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தேர்வு மையத்திற்கு செல்லும் போதே அனைத்து உடற்தகுதியும் கற்றுக்கொண்டு சென்றால் கண்டிப்பாக நீங்கள் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். இதனைத் தொடர்ந்து தினந்தோறும் இலவசமாக இந்த பயிற்சியை மாலை நேரங்களில் கற்றுக் கொடுத்து வருகிறார்.
இதுவரை இவரிடம் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களாக வலம் வருகிறார்கள். மேலும் அதிகமான இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களையும் ஊக்குவித்து வருகிறார். கல்லூரி மற்றும் பள்ளிகளில் ஆண்டு விடுப்பு நேரங்களில் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி அவர்களை பயிற்சிக்கு வாருங்கள் என்று தானாக முன்வந்து அழைப்பு விடுத்து வருகிறார்.
இவர் நம்மிடம் கூறுகையில் மயிலாடுதுறையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இளைஞர்களக்கு உடல் தகுதி பயிற்சி அளிக்கப்படுகிறது. போலீஸ் பணியில் சேரவிரும்பும் 500 பேருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சியும் இலவசமாக அளித்து வருகிறேன். சாய் விளையாட்டு மைதானத்தில் தினமும் மாலை 5 முதல் 6 மணிவரை காவல்துறை வேலைக்கு செல்வதற்கான கயிறு ஏற்தல், ஓட்டப்போட்டி , வட்டு எறிதல், தட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளும், சிலம்பம் பயிற்சியும் அளித்து வருகிறேன். 10வது, பிளஸ் 2 படித்தவர்கள் காவலர்களாகவும், டிகிரி முடித்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வாகனாலம். எழுத்த தேர்விற்கான பயிற்சியும் வரும் ஏப்ரல் மாதத்தில் அளிக்க உள்ளோம். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் காவல்துறை மற்றும் ராணுவத்தில் பணிக்குசெல்ல ஆர்வமுள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறேன். இதனை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெற வேண்டும் என்றார்.
