மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்:- பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு
மயிலாடுதுறை மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 10,286 பேரில் 9,618 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மாநில தரவரிசை பட்டியலில் 33-வது இடம் பிடித்து தேர்ச்சி விழுக்காடு 93.25 சதவீதம் இருந்த நிலையில் நிகழாண்டு 0.26 சதவீதம் கூடுதலாக மாணவர்கள் தேர்ச்சி அடைந்து 93.51 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்து மாநில தரவரிசையில் 29-வது இடத்தை பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் மயிலாடுதுறையில் உள்ள ஆசாத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹி.ஹிசாரா 596 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். குத்தாலம் தாலுகா தேரழுந்தூரைச் சேர்ந்த ஹிலுரூதீன்-சஹதூனாபேகம் தம்பதியின் மகளான இம்மாணவி தமிழில் 99, ஆங்கிலத்தில்; 98, பொருளியலில் 99, வணிகவியலில் 100, கணக்குப்பதிவியலில் 100, கணினி பயன்பாடுகள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாவட்டத்தில் முதலிடம் பெற்று பள்ளிக்கு வந்த மாணவி மற்றும் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து மாணவி கூறுகையில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் நன்றாக படித்து வெற்றி பெற்றதாகவும், ஆடிட்டர் ஆவது தனது லட்சியம் என்று தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்கள் 90.39 சதவீதமும், வழக்கம்போல் பெண்கள் 96.15 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியான மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 574, 572 மதிப்பெண்கள் பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடத்தையும், மயிலாடுதுறை அரசு மாதிரி பள்ளி 568 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version