சீர்காழியில் தொடர் மின்வெட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு

சீர்காழியில் தொடர் மின்வெட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு

ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தல்

தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு அதிகரித்து வருகிறது இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் பெறும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர், இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட ஏழை மக்கள் பயன்படுத்தக்கூடிய நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினந்தோறும் 24 வார்டுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகள்,பொதுமக்கள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர், குறிப்பாக அதிக அளவில் இருக்கக்கூடிய கர்பிணி பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது, கர்ப்பிணிகள் தங்கள் பெயர் பதிவை கட்டாயம் செய்ய வேண்டும் அவர்கள் சிகிச்சை பெற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டாயம் வர வேண்டும் என்பது உள்ளதால் தினந்தோறும் அதிக அளவில் வந்து செல்கின்றனர், இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே அந்த பகுதியில் சீர்காழி பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது இதனால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவிர்த்து வருகின்றனர் மின்தடை ஏற்புடைய கூடிய நேரத்தில் ஜெனரேட்டர் வசதியும் இல்லாமல் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் காற்றோட்டம் இல்லாமல் கையில் கிடைக்கக்கூடிய பொருட்களெல்லாம் வைத்து விசிறி கொண்டு வருகின்றனர், மருத்துவ நிர்வாகம் அதனைப் பொருட்படுத்தாமல் இருப்பதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்

இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Exit mobile version