திருச்சி கோவை திண்டுக்கல் தஞ்சாவூர் உள்ளிட்ட மேற்கு மாவட்ட பகுதிகள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்தும்.. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மற்றும் நாகூர்
பகுதிகளுக்கு திருவாரூர் வழியாகத்தான் செல்ல வேண்டும்.. இந்த நிலையில் திருவாரூர் பகுதியில் கடந்த அரை நூற்றாண்டுக்கு முன்னதாக புறவழிச் சாலை மற்றும்
புறவழிச்சாலையில் ரயில்வே மேம்பாலமும் அமைக்கப்பட்டது..
இந்த பிரதான புறவழிச் சாலையின் வழியாக நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு செல்ல வேண்டும்..
திருச்சியிலிருந்து நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை அமைக்கப் போவதாக அறிவித்திருந்த நிலையில்… அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.. தொடர்ந்து இருவழிப்பாதை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
ஒவ்வொரு நாளும் திருவாரூர் புறவழிச்சாலை வழியாக கேரளா கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும்.. கோவை திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வேளாங்கண்ணி மற்றும் நாகூர் பகுதிகளுக்கு சென்று வருகின்றது.. இந்த நிலையில்.. புறவழிச்சாலையில்.. சாலை மற்றும் ரயில்வே மேம்பாலத்தை இணைக்கக் கூடிய இடத்தில் திடீர் பள்ளம் விழுந்துள்ளது..
இந்த நிலையில் இன்று காலை முதல் அந்த இடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது..
பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் வாகனங்கள்.. அலுவலகங்களுக்கு செல்பவர்கள்.. பழைய பேருந்து நிலையம்.. விஜயபுரம் கடைத்தெரு பகுதிக்கு செல்பவர்கள்.. பேருந்துகள் அனைத்தும் நீண்ட வரிசையில் நின்று செல்லும் நிலை ஏற்பட்டது.. காலை முதல் தொடர்ந்து அந்த இடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் ரயில்வே பாலத்திற்கு மறுபுறம் உள்ள அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்களுக்கு செல்லக் கூடியவர்களும் போக்குவரத்து பாதிப்பினால் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
போக்குவரத்து காவலர்கள் இருந்தும்.. அரசுபேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சாலை விதிகளை மீறி சென்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
