“மாடுகளிடம் பேசும் அரசியல் தலைவர் !” – அரசியல்வாதிகளை கிண்டலடித்த அண்ணாமலை

“தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை நிற்க வைத்து பேசிக் கொண்டிருந்தார்” என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.

சென்னையில் நடைபெற்ற “அரசியல் மற்றும் ஆளுமைத் தலைமைத்துவம்” குறித்த பயிலரங்கில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, தற்போது வாக்காளர்களின் மனநிலையைப் பற்றி கூறினார்.

அவரது கூறல்படி, “நமது வாக்காளர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். 40% பேர் தேர்தலுக்கு ஒரே ஒரு வாரம் முன்பாகத் தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். இப்போது சித்தாந்தங்களை மையமாகக் கொண்டு ஓட்டு போடுவது குறைந்து விட்டது. ஓட்டாளர் பல அம்சங்களை கவனித்துப் பார்த்த பிறகே தங்கள் முடிவை எடுக்கிறார்கள்” என்றார்.

இதைத் தொடர்ந்து அவர் சில தலைவர்களின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். “ஒரு கட்சித் தலைவர் மாடுகளை நிற்க வைத்து பேசுகிறார். என்ன, மாடுகளுக்கு வாக்காளர் உரிமையா? இன்னொரு தலைவர் மரம் ஏறி இருக்கிறார். இப்பொழுது தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள்” எனச் சாடினார்.

மேலும் அவர் கூறியதாவது:
“மாற்றம் வரவேண்டும் என்றால் முதலில் நாம்தான் ஒழுக்கமாக இருக்க வேண்டும். கண்மூடித்தனமாக யாரையும் தலைவர்களாக ஏற்கக்கூடாது. இன்று வெறும் வெள்ளை சட்டை போட்டுத் ‘ரீல்’ போட்டாலே ஒருவர் தலைவர் ஆகிவிடுகிறார். அதிகாரத்தில் வந்தவுடன் செல்போன்கள் ஒட்டுக் கேட்பது, பழிவாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. பழிவாங்கும் மனப்பான்மை அரசியல்வாதிக்கு இருக்கலாம்; ஆனால் ஒரு தலைவருக்கு இருக்கக் கூடாது.

நாம் சும்மா இருந்தாலும் நம்மைப் பற்றி போஸ்டரில் அடைமொழி கொடுத்து விட்டுவிடுகிறார்கள். அரசியலில் எந்த பதவியும் நிரந்தரமில்லை, ஒருநாளிலேயே எல்லாம் மாறிவிடக்கூடும்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version