சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வன்னியர்களுக்கு 10.5% சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்ககோரியும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அறவழிப் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் பாக்கம்.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வாண்டையார் சமூக ஊடகப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு பெறவும், இடைக்காலத்தீர்வாக வஞ்சிக்கப்பட்ட வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு பெற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில மகளிர் சங்க செயலாளர் தேவி குரு செந்தில், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் அருண்குமார், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என 500 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
















