பூந்தமல்லி ஒன்றியDMKசார்பில் பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மத்திய மாவட்டம் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் பா.ச.கமலேஷ் தலையில் நடைபெற்றது.இதில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இதில் 100 நாள் வேலை திட்டத்தை அழிக்க ஒழிக்கு சட்டத்தை கொண்டு வந்த பாஜக அரசையும் அதற்கு ஒத்து ஊதும் அதிமுக அரசையும் கண்டித்து பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபுகஜேந்திரன் ,பூவிருந்தவல்லி சேர்மன் காஞ்சனா சுதாகர் உள்ளிட்ட பெண்கள், மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Exit mobile version