தரங்கம்பாடி அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் மாபெரும் இலவச இயற்கை மருத்துவ முகாமினை தருமபுரம் ஆதீனம் மடாதிபதி துவங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதும் வருடம் முழுவதும் 365 நாட்களும் ஹோமங்கள் மற்றும் சிறப்பு திருமண யாகங்கள் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவில் வளாகத்தில் தருமை ஆதீனம் ஆயுஷ் மருத்துவம் மற்றும் கல்வி மையம் தருமபுரம் மற்றும் திருச்சி கிரியா அறக்கட்டளை இணைந்து மாபெரும் இலவச இயற்கை மருத்துவம் முகாம் நடைபெற்றது. முகாமினை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் முழுவதும் இயற்கை மருத்துவம் மற்றும் இயற்கை மூலிகை இயற்கை உணவுகள் விற்பனை செய்யப்பட்டது பலர் ஆர்வத்துடன் பார்த்து வாங்கி சென்றனர்.
