காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. நெல்லுக்கு அடுத்த படியாக கரும்பு, வாழை, மரவள்ளிக் கிழங்கு போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அள்ளிவிளாகம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜன் என்பவர் தான் விளைவித்த மரவள்ளிக் கிழங்குகளை சொகுசு காரில் எடுத்துவந்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து விவசாய ராஜன் கூறுகையில், மரவள்ளி கிழங்கு எப்போதும் விளையும் நிலத்திருக்க வந்து வியாபாரிகள் வாங்கி செல்வார்கள், ஆனால் தற்போது மழை பெய்யும் நிலையில் யாரும் வராததால் நிலத்தில் மரவள்ளிக் கிழங்கு வீணாகும் சூழல் உள்ளதால் அதனை தானே காரில் எடுத்து வந்து விற்பனை செய்வதாகவும், ஏற்கனவே இதனை விளைவிக்க அதிக செலவு செய்த நிலையில், இதனை தனியாக வாடகைக்கு வாகனம் வைத்து விற்பனை செய்யாமல் தன்னுடைய சொந்த காரில் எடுத்து வந்து விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.
தற்போது சொகுசு காரில் மரவள்ளிக் கிழங்கு விற்பனை செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைராக பரவி வருகிறது.
















