சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு
கடை மேலாளர் ஊழியரை தாக்கிய நபர்கள், சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சூரக்காடு பகுதியில் காபி கபே இயங்கி வருகிறது. பகல், இரவு என 24 மணி நேரமும் இயங்கி வரும் இந்த காபி கடையில் நள்ளிரவு டீ குடிக்க வந்த நபர்கள் டீ, ஸ்னாக்ஸ் சாப்பிட்டுவிட்டு அதற்கான பணம் கொடுப்பதில் விலை அதிகமாக உள்ளதாக கூறி கடை மேலாளர் சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர் அப்போது மேலாளர் சக்திவேலை அந்த நபர்கள் தாக்கியுள்ளனர். தடுக்க வந்த கடை ஊழியரையும் டீ குடிக்க வந்த நபர்கள் தாக்கும் சிசிடீவியில் பதிவாகியுள்ளது. இந்த தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்து கடை உரிமையாளரும்,அனைத்து வணிகர்கள் நல சங்க மாவட்ட செயலாளருமான சுரேஷ் வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்துள்ளார்.
இரவுக்கடை நடத்தும் வணிகர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் இதுபோன்று நபர்களால் அடிக்கடி கடைகள் சேதம் ஏற்படுவதாக கூறி இரவுக்கடை நடத்தப் போவதில்லை என கடையின் உரிமையாளர் அறிவிப்பு பலகையும் வைத்துள்ளார். இது குறித்து சீர்காழி அனைத்து வணிகர்கள் நல சங்க தலைவர் வணிகர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

Exit mobile version