மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளியை கைது செய்ய கோரி சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே சரவணன் என்பவர் 13 வயது சிறுமிக்கு கடந்த இரண்டு மாத காலமாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தொடர்ந்து சிறுமி வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்த நிலையில் பெற்றோர் கேட்டபோது தூரத்து சொந்தமான சரவணன் அடிக்கடி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரிவித்துள்ளார். உடனடியாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கடந்த மாதம் 26 ஆம் தேதி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மீண்டும் 29ஆம் தேதி புகார் மனு அளித்துள்ளனர். மேலும் எந்த நடவடிக்கையும் காவல்துறை சார்பில் எடுக்கப்படாத நிலையில் வேதனை அடைந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள சரவணனை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
