மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னம்பந்தல், செம்பனார்கோவில், ஆக்கூர் வழியாக சின்னங்குடி சென்ற 2C என்ற அரசு பேருந்து ஆக்கூர் மருத்துவமனை முன்பு சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின் கம்பமும் இரண்டாக முரிந்து பேருந்து மீது விழுந்ததில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலுமாக உடைந்து பேருந்தும் சேதமடைந்தது. பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு நோய் பாதிப்பு ஏற்கனவே இருந்ததால் தற்போது பேருந்து ஓட்டும் போது வலிப்பு வந்ததால் ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்த புறப்பட்டுள்ளார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதனை தொடர்ந்து உடனடியாக பேருந்து ஓட்டுனரை ஆக்கூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 
			















