சென்னை : கண்ணகி நகர் மாநகராட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பகுதியைச் சேர்ந்த முனியா என்ற நபர் இன்று உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் கண்ணகி நகர் வழியாக சென்றபோது, ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிலர் மாநகராட்சி அலுவலகம் நோக்கி நாட்டு வெடியை வீசியதாக கூறப்படுகிறது.
வெடி பலத்த சத்தத்துடன் வெடித்ததால், அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பீதி அடைந்து வெளியே ஓடினர். வெடிப்பில் அலுவலகத்தின் முன்புறத்தில் இருந்த டியூப் லைட், சுவரிலிருந்த பலகைகள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்கள் சேதமடைந்தன.
சம்பவத்துக்குப் பின்னர் கண்ணகி நகர் போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். நாட்டு வெடியை வீசியவர்கள் யார், எந்த காரணத்தால் இந்த செயல் நடைபெற்றது என்பதற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

















