திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே மூவர்கோட்டை பகுதியில் உள்ள பழஞ்சேரி மேடு கிராமத்தில் வசித்து வருபவர் பேச்சுமுத்து. இவரது மகள் சுதா (36) திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் இறந்த நிலையில் தந்தை வீட்டில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் அம்மாபேட்டை சென்று அங்கிருந்து பேருந்து மூலம் திருவாரூர் வருவது வழக்கம்.அதன்படிஇன்று காலை வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் அம்மாபேட்டைக்கு சென்று கொண்டிருந்த செவிலியர் சுதாவை பழஞ்சேரிமேடு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வழி மறைத்து சுதா அணிந்திருந்த 7 பவுன் செயினை பறிக்க முயன்றுள்ளார். அப்போது அதனை சுதா தடுக்கவே ஆத்திரமடைந்த சுரேஷ் தான் வைத்திருந்த அறிவாளால் தலை நெற்றி கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுதாவை வெட்டிவிட்டு செயினையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து சுரேஷ் தப்பியுள்ளார்.அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செவிலியர் சுதா திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இநநிலையில் இது தொடர்பாக வடுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி சுரேஷை தேடி வருகின்றனர்.மேலும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் குற்றவாளி சுரேஷ் சில நாட்களுக்கு முன்பு வழக்கு தொடர்பாக சிறைக்கு சென்று விட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது

















