மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவாலி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்-75. இவரது மகன் குணா செந்தில் விசிக பிரமுகரான இவருக்கும் இவர்களது உறவினரான எதிர்வீட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், தவமணி ஆகியோருக்கும் இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது அப்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்று இரவு இரு குடும்பத்தார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர் அப்பொழுது முதியவர் குணசேகரனை எதிர்தரப்பினர் அருவாள் கொண்டு வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தந்தையை காப்பாற்றுவதற்காக சென்ற குணா செந்தில் மீது மரம் அறுக்கும் இயந்திரத்தை வைத்து எதிர் தரப்பினர் தாக்குதல் நடத்தியதில் அவருக்கு இரண்டு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவெண்காடு போலீசார் இறந்த குணசேகரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மேலும் தாக்குதலில் படுகாயம் அடைந்த குணா செந்நிலை மீட்டு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் தாக்குதலில் காயம் அடைந்ததை எதிர்தரப்பை சேர்ந்த பாலகிருஷ்ணன் பாலசுப்பிரமணியன் தவமணி ஆகிய மூவரும் சீர்காழி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர் தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கொலைச் சம்பவம் குறித்து அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு வந்து நேரில் விசாரணை மேற்கொண்டார்.


