- ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை வெறுமனே அடையாள சான்றாக மட்டுமே கருத முடியும்: அவை நம்பகமான ஆவணங்கள் அல்ல என, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
- தி.மு.க.,வினர், ‘ஓரணியில் தமிழகம்’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கைக்கு, ஆதார் உள்ளிட்ட விபரங்களை மக்களிடம் சேகரிக்கவில்லை என, அக்கட்சி தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பதில் அளிக்கப்பட்டுஉள்ளது.
- ஹர்மன் ப்ரீத் கவுர் சதம் மற்றும் கிராந்தி குவுட் 6 விக்கெட் வீழ்த்தி அசத்த, இங்கிலாந்து அணிக்கு எதிரான, ஒரு நாள் தொடரை வென்று அசத்தியுள்ளது இந்திய பெண்கள் அணி.
- நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வரும் காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், இதுவரை நடந்த ராணுவத்திற்கான பார்லி., நிலைக்குழுவின் 10 கூட்டங்களில், 2ல் மட்டுமே பங்கேற்றுள்ளார்.
- ரஷ்ய தயாரிப்பான, ‘மிக் 21 பைசன்’ போர் விமானங்களை, வரும் செப்டம்பருக்குள் சேவையில் இருந்து நீக்க, நம் விமானப்படை முடிவு செய்துள்ளது.
- பெங்களூரு ஹொஸ்கோட்டில், அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்படும் பிரியாணி கடையை, காலை 6:00 மணிக்கு திறக்குமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
- யுனெஸ்கோ அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
- கடந்த 2024ம் ஆண்டில் சைபர் மோசடியில் இந்தியர்கள் ரூ.22,845.73 கோடியை இழந்துள்ளனர் என பார்லிமென்டில் மத்திய அரசு கூறியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 206 சதவீதம் அதிகம் ஆகும்.
- பீஹாரில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் போது, 51 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
- ரூ.199 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டை வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.