ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சட்ட விரோத விளையாட்டுக்களை ஊக்குவித்ததாக நடிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இத்தகைய விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவர கொண்டா, ராணா டகுபதி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது.
தற்போது அவர்களை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.நடிகர் ராணா டகுபதி, ஜூலை 23ம் தேதி, பிரகாஷ் ராஜ் ஜூலை 30ம் தேதியும், விஜய் தேவரகொண்டா ஆகஸ்ட் 6ம் தேதியும் லட்சுமி மஞ்சு ஆகஸ்ட் 13ம் தேதியும் அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும் என்றும் அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.