2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், முதலீட்டாளர்கள் மாநாடுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கொண்டு வருவதில் பெருமை இல்லை, அவற்றை நடைமுறையில் செயல்படுத்துவதே வீரம் என்றும் குறிப்பிட்டார்.
2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும், இதனை டைரியில் எழுதிவைத்து விடுங்கள் என்றும் அமித்ஷா கூறினார்.