அதிமுக கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல. வஞ்சக வலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் எடப்பாடி பழனிச்சாமி காலையில் ஒரு பேச்சு அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சு. நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பேச்சு அதற்கு நேர்மாறாக இப்போது பிஜேபியோடு கூட்டணி என்று தெரிவித்துள்ளார்.
போன வாரம் கம்யூனிஸ்ட்களையே காணோம் என்றார், இந்த வாரம் அழைக்கிறார்.கம்யூனிஸ்டுகளுக்கு அவர் விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல. வஞ்சக வலை என்பதை நாங்கள் அறிந்தே வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் எனும் புதை குழிக்குள் விழுந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பது அதிமுக தான் என்றும் சண்முகம் விமர்சித்துள்ளார்.