முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியுடன் அசோக் லேலண்ட் நிறுவனம் வந்துள்ளது. 1:1 விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்கவுள்ளதாகவும், இதற்கான ரெக்கார்ட் தேதி ஜூலை 16 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜூலை 16ம் தேதியில் டீமேட் கணக்கில் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு பங்குக்கும் ஒரு இலவச பங்கு வழங்கப்படும்.
போனஸ் பங்குகள் ஒதுக்கப்படும் நாள் ஜூலை 17 (வியாழன்) ஆகும். இந்த பங்குகள் ஜூலை 18 (வெள்ளி) அன்று பங்கு சந்தையில் வர்த்தகத்திற்குக் கிடைக்கும்.
இதுதொடர்பாக, அசோக் லேலண்ட் நிறுவனம், போனஸ் பங்குகள் வெளியீட்டின் விவரங்களை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு நிறுவனம் செபியிடம் அறிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு இத்தகைய போனஸ் வழங்கப்பட்டது. அதன்பின் இப்போது முதல்முறையாக போனஸ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக :
போனஸ் விகிதம் : 1:1
ரெக்கார்ட் தேதி : ஜூலை 16, 2024
ஒதுக்கீட்டு தேதி : ஜூலை 17, 2024
வர்த்தகத்திற்குக் கிடைக்கும் தேதி : ஜூலை 18, 2024
மேலும், முதலீட்டாளர்களுக்காக ரூ.4.25 டிவிடெண்ட் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த செலவு ரூ.1,248 கோடி என நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிகர லாபம், வருவாய் விபரங்கள் :
2024ம் ஆண்டு மார்ச் காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனம் 38.4% உயர்வு கண்டுள்ளது. நிகர லாபம் ரூ.1,246 கோடி ஆகப் பதிவாகியுள்ளது (2023ம் ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.900 கோடி).
காலாண்டு வருவாய் 5.7% உயர்ந்து ரூ.11,906.7 கோடி,
EBITDA 12.5% வளர்ச்சியுடன் ரூ.1,791 கோடி என நிலவுகிறது.
இந்த வளர்ச்சியும், போனஸ் பங்குகளும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
















