தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கடலூர் அருகே தண்டவாளத்தைக் கடந்த பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கக்கூடியது என்றும், மாணவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியிருப்பது பற்றி கேட்டபோது, அவரிடம் தான் கேட்கவேண்டும் என்று கூறிய ஓ.பி.எஸ்., தேர்தலுக்கு இன்னமும் 8 மாதங்கள் உள்ளதால், மாநிலம் முழுவதும் தாமும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்றார்.